வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணம் 2 மடங்கானது

- ரூ. 50,000 ஆக இருந்த கட்டணம் ரூ. 100,000 ஆக அதிகரிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கான அனுமதிப்பத்திர புதுப்பித்தல் கட்டணத்தை அதிகரித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி இலக்கம் 1765/21 இல் பிரசுரிக்கப்பட்ட திருத்தப்பட்ட 1985 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி 364/9 வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 1985ஆம் ஆண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக ஒழுங்குமுறை 2 இன் பந்தி (ஆ) இரத்துச் செய்யப்பட்டு இதனூடாக மேலும் திருத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த இடமொன்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை நடாத்திச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ.50,000 இலிருந்து ரூ. 100,000 ஆக அதிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

PDF File: 

Add new comment

Or log in with...