பிரிட்டன், பிரான்ஸ் விஜயத்தை அடுத்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடு திரும்பினார்.

கடந்த ஜூன் 17ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினா், இன்று (26) மு.ப. 9.10 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 650 எனும் விமானத்தில் பிரான்ஸிலிருந்து துபாய் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஜூன் 19 - 20 ஆகிய தினங்களில் இலண்டனில் நடைபெற்ற சர்வதேச ஜனநாயக ஒன்றியத்தின் (International Democrat Union - IDU) 40ஆவது வருட நிறைவு விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.

அத்துன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனின் அழைப்பினை ஏற்று பிரான்ஸின் பரிஸ் நகரில் ஜூன் 22 - 23 இல் நடைபெற்ற A New Global Financial Pact  (புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்) தொடர்பிலான உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...