வேக கட்டுப்பாட்டை இழந்த மோ.சைக்கிள்; 19 வயது நபர் பலி

- மட்டக்களப்பு பகுதியில் சம்பவம்
- சைக்கிளை செலுத்தியவர் காயம்

மட்டக்களப்பு, வெல்லவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை, நெடியவத்தை பைபாஸ் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் (22) அதிகாலை சின்னவத்தை பிரதேசத்தில்  இருந்து நெடியவத்தை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற நபர் கயமடைந்து, களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் சாரதி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 19 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add new comment

Or log in with...