பாதுக்கை, லியன்வல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் புகுந்த முகமூடி அணிந்த மூவர் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று (20) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளரிடம் வாளை காட்டி மிரட்டி ரூபா 15 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டின் உரிமையாளரான தொழிலதிபரும் அவரது மகனும் வீட்டில் தங்கியிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தொழிலதிபரின் மகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கொள்ளையர்கள் முகத்தை மூடிக்கொண்டு வந்திருப்பதால் அவர்கள் குடியிருப்பாளர்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Add new comment