ஹஜ் தலைப்பிறை தென்பட்டது; பிறை 10 இல் ஜூன் 29 பெருநாள்

இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பிறைக்குழு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.

ஹிஜ்ரி 1444, துல் ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை, நாட்டின் சில பகுதிகளில் இன்று (19) தென்பட்டுள்ளது.

அதற்கமைய, துல்ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாளான எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி, ஹஜ்ஜுப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...