கிழக்கு மாகாணத்தில் புகையிரத இணைப்புகளை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவை சந்தித்து, கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத இணைப்பை அதிகரிப்பது குறித்தும், புகையிரத சேவையை நவீனப்படுத்துவது தொடர்பாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது தபால் சேவையில் நியமனம் பெற்ற பெருந்தோட்ட இளைஞர்கள் அடிப்படை சம்பள விகிதத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க கவனம் செலுத்துமாறும் செந்தில் தொண்டமான் பந்துல குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

செந்தில் தொண்டமான் முன்வைத்த கோரிக்கைக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க அமைச்சர் பந்துல குணவர்தன ஒப்புக்கொண்டார்.

இதன் போது அமைச்சர் அவரது வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் கையளித்தார்.


Add new comment

Or log in with...