கடமைக்கு இடையூறு; 4 சந்தேகநபர்கள் கைது

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 02ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அருகாமையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலான விசாரணைகள்  இடம்பெற்று வருகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கிளிநொச்சி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்றைய தினம் (15) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் 53 வயதுடைய, பெதுருதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அலுவலக பணியாளருமாவார். மற்றைய நபர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆசிரியர்.  சந்தேகநபர்களில் ஒருவர் 40 வயதுடைய நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சாரதியும் மற்றைய நபர் 43 வயதான ஆசிரியர் சங்கத்தின் உப தலைவரும் ஆவார்.

சந்தேகநபர்களை நேற்றைய தினம் (15) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் தலா 2 இலட்சம் ரூபா  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 13 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
 


Add new comment

Or log in with...