பணிப் பெண்ணை அச்சுறுத்தி கொள்ளை; சந்தேகநபர்களை தேடும் பொலிஸார்

- ரூ. 1 ½ கோடிக்கும் அதிக பணம், நகை கொள்ளை

தேடப்படும் இரண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அறியத்துருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.

நேற்று முன்தினம் (12) பொரலஸ்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்பில்லவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த இருவர், அங்கிருந்த பணிப்பெண்ணை அச்சுறுத்தி, வீட்டிலிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்கள், தங்க நகைகள் அடங்கிய சிறிய பெட்டகத்தை திருடிச் சென்றுள்ளனர்.

கொள்ளையிட்ட பொருட்களின் பெறுமதிய, ஒரு கோடி 70 இலட்சத்து 78 ஆயிரத்து 800 ரூபா (ரூ. 10,707,800) என மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்குற்றத்தில் ஈடுபட்ட இரு சந்தேகநபர்களும் குறித்த பெட்டகத்தை எடுத்துச் செல்லும் காணொளி சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ள நிலையில், அவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொரலஸ்கமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி: 0718591646
பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையம் : 0112150769


Add new comment

Or log in with...