Lean Six Sigma Project திட்டத்திற்கான தங்கவிருது வென்ற DFCC வங்கி

DFCC வங்கியின் ஒரு அங்கமான DFCC Leasing, இலங்கை தர மேம்பாடு மற்றும் உற்பத்தித்திறன் சங்கத்தினால் (Sri Lanka Association for the Advancement of Quality & Productivity - SLAAQP) அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட தரம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் 2022 க்கான தேசிய மாநாட்டில், அதன் செயல்முறை மேம்பாடு சார்ந்த Lean Six Sigma Project திட்டத்திற்கான தங்க விருது அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

கடந்த பெப்ரவரி 21 ஆம் திகதி கொழும்பு BMICH இல் இடம்பெற்ற இந்த நிகழ்வு, 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், 400 க்கும் மேற்பட்ட அணிகளில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்தது. இந்த விருது DFCC வங்கிக்கான ஒரு சாதனை இலக்காகும், ஏனெனில் இது Lean Six Sigma திட்டத்திற்கான விருதை 1 வது முறையாக வங்கி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...