பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாம் நிரபராதி என இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி நீதிமன்றத்தில் நேற்று (08) தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை தொடர்ந்தும் நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷ்க குணதிலக்க குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருந்தால், அவருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படவிருந்தது.
கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த வழக்கு விசாரணைகளின் போது இந்த குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்களை நீக்க அவுஸ்திரேலிய விசாரணை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் பெண்ணின் விருப்பமின்றி பலவந்தமாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டு அவருக்கு எதிராக இன்னும் நிலுவையில் உள்ளது.
Add new comment