2300 நாட்களை கடந்து தொடரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் நேற்று வியாழக்கிழமை (08) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

நேற்றுடன் 2,300 ஆவது நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்கொண்டு

வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் தொடர் போராட்டம் நடக்கும் பந்தலுக்கு முன்பாக போராட்டம் நடைபெற்றது.

இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் படங்களை ஏந்தியவாறும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தீர்வு கிடைக்கும் வரை சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் தொடருமென காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.


Add new comment

Or log in with...