ஹெய்ட்டி வெள்ளம்; 42 பேர் உயிரிழப்பு

ஹெய்ட்டியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. 85க்கும் அதிகமானோர் காயமடைந்ததோடு 11 பேரைக் காணவில்லை. இதில் சுமார் 14,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

வார இறுதியில் பெய்த கனத்த மழை வெள்ளத்தைக் கொண்டுவந்தது. ஆறுகள் கரைபுரண்டோடின. அதனால் மண்சரிவுகளும் ஏற்பட்டன.

வெள்ளம் வீதிகளுக்குள் புகுந்து வீடுகளைச் சேதப்படுத்தியது. வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வானிலை மேம்பட்டுள்ளதால் அங்கு துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகள் சேதத்தை மதிப்பிட ஆரம்பித்துள்ளனர். வீடுகளை இழந்தோர் தற்காலிகத் தங்குமிடங்களைத் தேட முயல்கின்றனர்.

இந்நிலையில் ஹெய்ட்டியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.


Add new comment

Or log in with...