குட்டி மாலிங்கவை சந்தித்தார் லசித்

ஒன்பது வயது சிறுவனின் பந்துவீச்சு பாணி தனது அவதானத்தை பெற்ற நிலையில் அந்த சிறுவனை கண்டறிய உதவியதற்கு சமூக ஊடக பயனர்களுக்கு இலங்கை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மாலிங்க, அந்த ஒன்பது வயது சிறுவனான வீரவிலவைச் சேர்ந்த தினெத் அனுஹஸின் பெற்றோருடன் தாம் பேசியதாக தெரிவித்துள்ளார். அந்த சிறுவன் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தாம் பயிற்சி வழங்குவதற்கான வாய்ப்பு பற்றியும் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் பந்துவீச்சு பாணி தனது அவதானத்தைப் பெற்றதாகவும், தினெத் பாடசாலை மட்டத்தில் கிரிக்கெட் விளையாட விரும்பினால், தம்மை விட சிறந்த வீரராக வரும் திறமை அந்த சிறுவனுக்கு இருப்பதாகவும் மாலிங்க தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...