தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் இன்று

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடரை தீர்மானிக்கும் முன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (07) ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையை இலகுவாக வீழ்த்தியதோடு இரண்டாவது போட்டியில் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்நிலையில் இலங்கை அணி இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணியுடன் இன்றைய தினத்திலம் களமிறங்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர மற்றும் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க அணிக்கு திரும்பி இருப்பது வலுச் சேர்ப்பதாக உள்ளது. மறுபுறம், இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளது. இது அந்த அணிக்கு வலுச் சேர்ப்பதாக அமையும். இலங்கை அணி அடுத்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் ஆடுவதற்காக சிம்பாப்வே பயணிக்கவுள்ள நிலையில் ஆப்கானுடனான தொடர் வெற்றி என்பது அணிக்கு முக்கியமானதாக உள்ளது.


Add new comment

Or log in with...