அம்பாறை மாவட்ட உடகவியலாளர் சம்மேளன தலைவராக மீண்டும் கலாபூஷணம் மீரா இஸடீன்

அம்பாறை மாவட்ட உடகவியலாளர் சம்மேளனத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் வருடாந்த பொதுக்கூட்டமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2023.06.04 முழுநாள் நிகழ்வாக நடைபெற்றன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா. எஸ்.இஸடீனின் தற்காலிக தலைமையிலும், செயலாளர் ஏ.ஜே.எம்.ஹனிபாவின் நெறிப்படுத்தலிலும், ஒலுவில் இஸ்மாயில் ஹாஜியார் (அஸீஸ்) தோட்டமண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் முதன்மை மிக்க ஊடக அமைப்பான அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் செயற்பாடுகளை புதிய உத்வேகத்துடனும், வினைத்திறனுடனும் முன்னெடுப்பதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் நிகழ்வில் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.

சம்மேளனத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்ற போது மீண்டும் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ். இஸடீன் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதுடன் இத்தெரிவு மூலம் அவர் சம்மேளனத்தின் ஆயுட்காலத்தலைவராக செயற்படுவாரெனவும் உறுப்பினர்களின் ஏகோபித்த தீர்மானமாக அறிவிக்கப்பட்டது.

(06ஆம் பக்கம் பார்க்க)

துறைநீலாவணை நிருபர்...


Add new comment

Or log in with...