தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் வேண்டும்

- ஜனாதிபதியை தலையிடக் கோருகிறார் SLFP திருமுருகன்

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்க, ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நுவரெலியா மாவட்ட தமிழ் பிரதிநிதி குழுத் தலைவரும் நுவரெலியா தொகுதி அமைப்பாளருமான கலாநிதி சதானந்தன் திருமுருகன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தமிழ் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட இக்கூட்டத்தில் திருமுருகன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான சம்ள உயர்வை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஆயிரம் ரூபா சம்பளம் சகல தோட்டங்களிலும் வழங்கப்படுவதில்லை.

அத்துடன், கூட்டு ஒப்பந்தம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த ஒப்பந்தத்துக்கேற்ப தோட்ட கம்பனிகள் செயற்படு வதில்லை.

இதனால் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வழிநடத்துகின்றன.

எனவே, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நீதிமன்ற வழக்கை மீளப் பெற வேண்டும்.

மேலும், கூட்டு ஒப்பந்த முறைமையை கொண்டு வந்து, பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்த்து வைக்க ஜனாபதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தோட்டப்பகுதியில் தேயிலைச் செடி உற்பத்தி செய்யப்படாத காணிகளை, பெருந்தோட்ட இளைஞர்களுக்கு விவசாயம் அல்லது மாற்று விவசாயம் செய்வதற்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...