இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா பறிமுதல்

- தமிழக முத்துப்பேட்டையில் மூவர் கைது

தமிழகத்தின் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் 03 பேரும் கைதாகினர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கடலோர பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக திருவாரூர் மாவட்ட கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கியூ பிரிவு பொலிஸார், நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்தி காட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்ற மூன்று பேர் தப்பியோடினர். விரைந்து செயற்பட்ட பொலிஸார் மூவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் அலையாத்தி காட்டில் 10 மூடை கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சா மூட்டைகளையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது


Add new comment

Or log in with...