ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார் நிலானி ரத்நாயக்க

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ள இலங்கையின் தடைதாண்டி ஓட்ட வீராங்கனை நிலானி ரத்நாயக்க போட்டித் தடைக்கு முகம்கொடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி நிலானி பங்கேற்ற ஊக்கமருந்து சோதனையில் அவரது உடலில் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தால் தடை செய்யப்பட்ட கூறு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற நிலையிலேயே நிலானி ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

எதிர்வரும் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டி மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பை கொண்டவராக நிலானி உள்ளார். எனினும் தாம் தெரிந்தே அந்த தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தவில்லை என்றும் இது தொடர்பிலான விசாரணைக்கு முகம்கொடுக்க தயாராக இருப்பதாகவும் நிலானி குறிப்பிட்டுள்ளார்.


Add new comment

Or log in with...