வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் கிழக்கு ஆளுநர் விசேட கலந்துரையாடல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையிலான கலந்துரையாடல் இன்று(06) கொழும்பில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் சுற்றுலா, மீன்வளத்துறை, கனிம மணல் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கும் நாடுகளின்  நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஆளுநரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று அதற்கு சாதகமான பதிலை வெளிவிவகார அமைச்சர் அளித்துள்ளார்.


Add new comment

Or log in with...