ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் ஒரு சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரண்

- உயர் நீதிமன்றம் அறிவிப்பு
- பாராளுமன்ற துறைசார் குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியனம்
- இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்புகள்

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'ஊழல் எதிர்ப்பு' எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) சபையில் அறிவித்தார்.

'ஊழல் எதிர்ப்பு' எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு,

சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), 50(1)(a), 53(1), 62(1), 65, 67(5), 71(6) மற்றும் (8), 80, 93, 99, 101, 112, 149 மற்றும் 162 ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு ஒத்திசைவாகாது.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின் இந்த ஒத்திசைவாகாத தன்மை இல்லாமல்போய்விடும்.

இந்தத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றத்தினால் குறிபிடப்பட்டிருப்பதாவது, சட்டமூலத்தின் 8(3), 136, 141, 142 மற்றும் 156 வாசகங்கள் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மூலம் மனுதாரர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 'மாகணசபை தேர்தல்கள் (திருத்தம்)' எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  ஆற்றுப்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும் மற்றும் 4ஆம் வாசத்தின் நீக்குவதற்குமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பக்கு ஒவ்வாதனவாகவிராது என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமண்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான 'பாராளுமன்ற விசேட குழுவில்' பணியாற்றுவதற்காக

 • (டாக்டர்) ரமேஷ் பதிரண

தலைமையிலான குழுவுக்கான உறுப்பினர்களையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இதற்கு அமைய இந்த விசேட குழுவின் உறுப்பினர்களாக

 • (கலாநிதி) சுரேன் ராகவன்
 • (திருமதி) டயனா கமகே
 • (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ்
 • சட்டத்தரணி ரஊப் ஹகீம்
 • விஜித ஹேரத்
 • (கலாநிதி) சரத் வீரசேக்கர
 • நிரோஷன் பெரேரா
 • அஜித் மான்னப்பெரும
 • நிமல் லான்சா
 • துஷார இந்துனில் அமரசேன
 • (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன
 • அகில எல்லாவல
 • நாலக பண்டார கோட்டேகொட
 • சட்டத்தரணி மதுர விதானகே

ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும்  2022 நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை  என்பனவற்றிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற  உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து   நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

 • இதற்கமைய மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற (திருமதி) கோகிலா குணவர்தன
 • நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற மர்ஜான் பளீல்
 • தேசிய பாதுகாப்பு  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜோன்ஸ்டன் பெனாண்டோ
 • சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சட்டத்தரணி மதுர விதானகே
 • பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பணியாற்ற (கலாநிதி) சரத் வீரசேக்கர
 • வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஏ. எல். எம். அதாஉல்லா
 • உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சீ.பீ. ரத்நாயக்க
 • சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜயந்த கெட்டகொட
 • வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற  காமினி லொக்குகே
 • சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற (திருமதி) முதிதா பிரிஸான்தி
 • சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப்
 • ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற  திஸ்ஸகுட்டி ஆரச்சி
 • வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக,

 • பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக ஏ. எல். எம். அதாஉல்லா

தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக

 • மிலான் ஜயதிலக

தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.


Add new comment

Or log in with...