43 வருட சுற்றாடல் சட்டத்தை திருத்தும் ஜனாதிபதியின் முயற்சி பாராட்டுக்குரியது

- சுற்றாடல் ஆர்வலர் ஊடகவியலாளர் அருண் டயஸ் பண்டாரநாயக்க

‍நாட்டில் காணப்படும் 43 வருடங்கள் பழமையானதான தேசிய சுற்றாடல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகளுக்கு சுற்றாடல் ஆர்வலரும் ஊடகவியலாளருமான அருண் டயஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைவாக இலங்கையில் நிறுவப்படவிருக்கும் காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான பல்கலைக்கழகம் முழு உலகயும் இலங்கையை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் ‘101 கலந்துரையாடல்’ நிகழ்வில் நேற்று (05) கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2048 இல் பசுமை பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கான வேலைத்திட்டத்திற்கு இணையாக 47 ஆம் இலக்க சுற்றாடல் திருத்தச் சட்டமூலம் தற்போதும் நீதித்துறையினரிடம் கையளிக்கப்படுள்ளது.

அத்தோடு சிங்கராஜ வனம், ஹோட்டன் தென்னை, நக்கில்ஸ் மலைத்தொடர் பகுதி மற்றும் மகாவலி வலயங்களை உயிர்புடன் காணப்படும் (living entities) அம்சங்களாக அறிவிப்பதற்கான பிரகடனமொன்றை உருவாக்குவதற்கான ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புதிய கொள்கைகள் நியூசிலாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் அமுலில் உள்ளதாகவும், அதனால் அந்நாட்டு மக்கள் சுற்றுச்சூழலையும் உயிருள்ள அம்சங்களாக கருதி பாதுகாக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர் என்றும் ஊடகவியலாளர் அருண் டயஸ் சுட்டிக்காட்டிகானர்.

சுற்றால் என்பது பரந்த விடயப்பரப்பு என்பதாலும் அதனை பாதுகாக்க தவறும் பட்சத்தில் எமது எதிர்கால சந்ததிக்கு நாடு எஞ்சியிருக்காது என்றும் சுற்றாடல் தொடர்பில் சமூகத்தின் அறிவை மேம்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சுற்றாடல் என்பது மிகப்பெரிய விடயப்பரப்பும் வளமும் ஆகும். சுற்றாடல் பாதுகாப்பினை தனியொருவரால் மாத்திரம் உறுதிப்படுத்திவிட முடியாது. சமூகம் முழுவதுமான ஒன்றுபட்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக அர்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். அதேபோல் பசுமை பொருளாதாரம் ஒன்றை நாம் உருவாக்கத் தவறும் பட்சத்தில் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க நேரிடலாம் எனவே சுற்றாடல் பாதுகாப்பிற்கான வலுவான சட்டங்கள் அவசியமாகும்.

சுற்றாடல் பற்றிய மாற்று சிந்தனைகள் சமூகத்தில் தோற்றம் பெற ஆரம்பித்துள்ள நிலையில் வியாபாரிகள் மாத்திரமின்றி பொது மக்களும் புதிய முயற்சிகளின் போது சுற்றாடல் என்ற விடயத்தை மறந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். அதனால் சட்டதிட்டங்களுக்கு மாறாக சுற்றாடல் மீதான நமது அணுகுமுறைகள் எவ்வாறு உள்ளன என்பதை பற்றியும் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது.

சுற்றாடல் பாதுகாப்பிற்கான சட்டங்கள் தற்போதும் உள்ளன. அவற்றுக்கு மதிப்பளிக்க நாம் சகலரும் கற்றுக்கொள்ள வேண்டும், சமூகம், பாடசாலை மற்றும் மாகாண மட்டங்களில் இது குறித்த தெரிவுகள் அவசியமாகும். அதேபோல் சுற்றாடல் தொடர்பில் நாம் கொண்டுள்ள தெரிவுகள் போதுமானதல்ல. சிலர் விலங்கினங்களே சுற்றாடல் என்று கருதுகின்றனர்.

அதற்கு அப்பாற்பட்ட பல்வேறு விடயங்கள் சுற்றாடலில் காணப்படுகின்றன. அவை அனைத்தினதும் முக்கியத்துவத்தை நாம் உணர மறுப்பதால் சுற்றாடல் பாதுகாப்பற்று போகிறது. இது பற்றிய புரிதல்களை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதோடு, இளைஞர்கள் சுற்றாடல் மீது பற்று கொண்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.

சுற்றாடலின் பெறுமதியான அம்சங்களை உயிர்ப்புள்ள விடயங்களாக பெயரிடுவதானது வரவேற்புக்குரியதாகும். சீகிரியா போன்ற சொத்துக்களை அழித்துவிட முடியாது என்பதை சகலரும் அறிவோம். அதேபோன்று நக்கீல்ஸ் மலைத்தொடரையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மரங்களை வெட்டி வியாபரம் செய்ய நாம் முற்படுகின்ற வேலையில் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும். அந்த வகையில் நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முனைப்பு காலோசிதமானதாகும்.

முன்பை விடவும் தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனது இளம் வயதில் காணப்பட் மழைவீழ்ச்சி பதிவாகும் முறைமைகள் இன்று மாறிப் போயுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் எமக்கென ஒரு நாடு எஞ்சியிருக்காது. காலநிலை அனர்த்தங்களே இந்நிலைக்கு காரணமாகும். அடுத்த வருடம் இந்நாட்டில் காலநிலை அனர்த்தங்கள் தொடர்பிலான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார் என்று அறியக் கிடைத்தது. அதனால் முழு உலகமும் இலங்கையின் பக்கமாக திரும்பிப் பார்க்கும். வேறு நாட்டிலுள்ள விஞ்ஞானிகள் நமது நாட்டிற்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்வர். அறிவை மேம்படுத்திக்கொண்டால் மாத்திரமே காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க முடியும்.

புத்தகங்களுக்கு மாத்திரம் மட்டுப்பட்டு கிடக்காமல் பாடசாலை மட்டத்திலிருந்து சுற்றாடல் கற்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் ஒரே நாளில் செய்துவிட முடியாது என்றாலும், இலக்கு ஒன்றுடன் முன்னோக்கி நகர வேண்டியுள்ளது. விலங்கினங்கள், மர வகைகள், உட்பட எமது சுற்றாடலில் காணப்படும் பெறுமதிமிக்க வளங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். சுய ஒழுக்கத்துடன் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

‘1O1 கலந்துரையாடல்’ நிகழ்வில் தகவல்களை தெரிந்துக்கொள்வதற்கான வட்ச அப் குழுவில் இணைந்துக்கொள்ள (https://tinyurl.com/101Katha)


Add new comment

Or log in with...