- நாளாந்த உற்பத்தியை 1 கோடியிலிருந்து 90 இலட்சமாக 10 இலட்சம் பீப்பாய்களால் குறைப்பு
சவூதி அரேபியா தனது கச்சா எண்ணெய் எரிபொருள் உற்பத்தியை நாளொன்றுக்கு ஒரு மில்லியன் (10 இலட்சம்) பீப்பாய்களை குறைக்க முடிவு செய்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சவூதியின் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை, தினமும் 9 மில்லியன் பீப்பாய்களாக குறைப்பதாக தெரிவித்துள்ளது.
எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC மற்றும் அதன் கூட்டாளர்கள் (OPEC+) நேற்று (04) ஞாயிற்றுக்கிழமை, தமது வருடாந்த கச்சா எண்ணெய் உற்பத்தியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என அறிவித்துள்ள நிலையில், உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவூதி அரேபியா விடுத்துள்ள குறித்த அறிவிப்பு சர்வதேச அளவில் எரிபொருள் விலையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது.
தனது இந்த உற்பத்திக் குறைப்பு எதிர்வரும் ஜூலை முதல் அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2% இனால் அதிகரித்து 77 - 78 டொலர்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment