4.6 கி.கி. தங்கத்துடன் பிரெஞ்சு பிரஜை விமானநிலையத்தில் கைது

- ரூ. 85 இலட்சம் பெறுமதி என மதிப்பீடு

4 கிலோகிராம் 611 கிராம் தங்கத்துடன் பிரெஞ்சு பிரஜை ஒருவர் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (05) காலை, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL 501) மூலம் பிரான்ஸின், பரிஸ் நகரிலிருந்து இலங்கைக்கு வந்த சந்தேகத்திற்கிடமான நபரை சோதனையிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும் அதன் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இலங்கை சுங்கத்தின் இரத்தினக் கற்கள் மதிப்பீட்டுத் திணைக்களத்தினரால் அவரது பயணப் பொதியை சோதனையிட்டதில், சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த தங்கத்தின் மொத்த நிறை 4 கிலோ 611 கிராம் எனவும் இதன் சந்தைப் பெறுமதி ரூ. 85 மில்லியன் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பெச் ஸ்மைல் எனும் பெயருடைய பிரெஞ்சு நாட்டவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Add new comment

Or log in with...