அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் முடிவுகள் ஓகஸ்டில் வெளியீடு

அல்லாமா இக்பால் புலமைப்பரிசிலுக்கான முடிவுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாத்ம் அறிவிக்கப்படவுள்ளதாக, கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் உயர்கல்வி ஆணைக்குழு, அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்திற்கான தெரிவுப் பரீட்சையை மே 29 முதல் ஜூன் 04 வரை  இலங்கையில் நடாத்தியிருந்தது.

புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, மாத்தறை மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாடளாவிய ரீதியில் இருந்து மாணவர்கள் இப்பரீட்சைகளுக்கு தோற்றியிருந்தனர். இதில் பல்வேறு இனங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இப்பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

தெரிவு செய்யப்பட மாணவர்களுக்கான  புலமைப்பரிசில் உயர் கல்வி ஆணைக்குழுவின் தலைவரினால் வழங்கப்படவுள்ளதோடு, கற்கைநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் அடிப்படையில், கல்வி நடவடிக்கைகள் இவ்வருடம் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...