கோல்ட்ஸ் கழக 150 வருட நிறைவில் பல போட்டிகள்

இலங்கையின் பழைமையான கிரிக்கெட் கழகங்களில் ஒன்றான கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தின் 150 வருட பூர்த்தியை ஒட்டி பல போட்டி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன் முதல் நிகழ்வாக இலங்கையிலுள்ள பிரபலமான கிரிக்கெட் கழகங்களுக்கிடையில் 06 பேர் கொண்ட ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஜுன் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோல்ட்ஸ் கழகத்தில் கடந்த வியாழக்கிழமை (01) மாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

இதில் பிலியட்ஸ் விளையாட்டுடன் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் கொண்ட நீண்ட கால பிணைப்புக்கு கெளரமளிக்கும் விதமாக பிலியட்ஸ் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

இப் போட்டிகளோடு ஹொக்கி போட்டித் தொடரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹொக்கி போட்டிகள் பொலிஸ் பார்க் மைதானத்தில் வரும் ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் நடைபெறும்.

150 வருட பூர்த்தி விழாவின் ஓர் அங்கமாக ‘லெஜன்ட்ஸ் நைட்’ நிகழ்வு செப்டம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை பிரதிநிதித்துப்படுத்தி முன்னணியில் திகழும் கிரிக்கெட் வீர, வீராங்கனைகள் கலந்து கொள்வதோடு கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...