மலேசியாவில் பன்னாட்டு வர்த்தக மாநாட்டின் முன்னேற்பாடுகள்

உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமார் மலேசியாவில் ஜூன் 27, 28ஆம் திகதிகளில் பிளாட்டினம் சென்ட்ரல் SME Corpல் நடைபெற உள்ள பன்னாட்டு சிறு குறுந்தொழில் வர்த்தக மாநாட்டு முன்னேற்பாடுகளை கவனிக்க அங்கு சென்றிருந்தார்.

முதன்மை நிகழ்வாக மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளன (MAICCI) தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மலேசிய சிறு குறுந்தொழில் அமைச்சக SME Corp சிறப்பு அதிகாரி குழுக்கள் அடங்கிய கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தொழிலதிபர்களும், மலேசியாவில் உள்ள தொழிலதிபர்களும், பயனடையும் வகையில் நிகழ்ச்சியை அமைக்க வேண்டும் என முடிவு செய்து தொழில் கலந்தாய்வு நடத்த எவ்வாறு நேரம் ஒதுக்குவது போன்ற ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற்றது. அதில் இந்நிகழ்வை நான்கு அமர்வுகளாக நடத்துவது எனவும் ஒவ்வொரு அமர்விலும் இரண்டு மணி நேரத்தில் 200 பேர் சந்திக்க வைக்கலாம் எனவும் ஆலோசிக்கப்பட்டது.

அதன் பொருட்டு 27 ஆம் திகதி காலை 10 மணி முதல் 12 மணி வரை முதல் அமர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இரண்டாவது அமர்வும் 28ஆம் திகதி காலை 10 மணி முதல் 12 மணி வரை மூன்றாவது அமர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நான்காவது அமர்வும் நடத்துவதென முடிவு செய்து மலேசியாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் விதமாக இந்நிகளை அமைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மலேசியாவில் உள்ள 14 மாநில தொழில் வர்த்தக சங்கங்களும், 15 துறை சார்ந்த வர்த்தக பிரதிநிதிகள் உறுப்பினர்கள், சுமார் ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு மலேசிய சிறு குறுந்தொழில் கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமியும், நாடாளுமன்ற உறுப்பினர் YB கேசவனும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்வு உலகத் தமிழ் வர்த்தக சங்கம், மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம் இணைந்து SME Corp ஆதரவில் நடைபெற உள்ளது என உலகத் தமிழ் வர்த்தக சங்க தலைவரும் ஏற்பாட்டு குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார். மேலும் விபரங்களுக்கு +6016167708 என்ற வட்ஸ் அப்பிலும் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்வில் கலந்து கொள்ள கூகுள் பாரத்தை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...