இந்திய புகையிரத விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அனுதாபம்

- விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு

இந்தியாவின் கிழக்கு ஒடிசா மாநிலத்தில் 3 புகையிரதங்கள் மோதி விபத்துக்குள்ளானமை தொடர்பில் கேள்வியுற்று மிகுந்த கவலை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர  மோடிக்கு அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

துயரமான இந்த தருணத்தில் அயல் நாட்டவர்கள் என்ற வகையில் இலங்கை அரசாங்கமும் மக்களும் இந்தியாவுடன் கைகோர்த்து நிற்போம் எனவும் உறுதியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக  விபத்துக்கு  முகம்கொடுத்துள்ள இந்திய அரசாங்கத்திற்கு  வலிமையும் தைரியமும் கிட்ட வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் புகையிரதங்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...