பாகிஸ்தானில் மே மாதத்தில் பணவீக்கம் 37.97 வீதம் என சாதனை அளவை தொட்டிருப்பதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தரவு காட்டுகிறது. பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதோடு அந்நாட்டின் முக்கியமான கடன் பெறும் பேச்சுவார்த்தையும் ஸ்தம்பித்துள்ளது.
மே 2022 இல் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் 50 வீதத்திற்கு மேல உயர்ந்திருப்பதோடு கடந்த 12 மாதங்களில் சராசரி பணவீக்கம் 29.16 வீதமாக இருந்தது என அண்மைய பாகிஸ்தான் புள்ளியியல் தரவு காட்டுகிறது.
“இந்த அளவான பணவீக்கம் வறிய மற்றும் மத்திய வகுப்பு குடும்பங்களை மோசமாக பதிப்பதோடு ஒவ்வொரு வீதப் புள்ளியிலும் அவர்களின் வருவாய் இழந்து செல்கிறது” என்று கராச்சியைச் சேர்ந்த நிதியாளர் ஒருவரான முஹமது சுஹைல் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் நீடித்த தவறான பொருளாதார செயற்பாடுகள் பாகிஸ்தான் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தியதோடு 2022இல் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியை மூழ்கடித்த பயங்கர வெள்ளம் மற்றும் சர்வதேச எரிசக்தி பிரச்சினை நிலைமையை மேலும் மோசமாக்கியது.
Add new comment