மதீஷ, ஹேமன்த ஒருநாள் அறிமுகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (02) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆட லசித் மாலிங்க பாணியில் பந்துவீசும் மதீஷ பத்திரன மற்றும் லெக் பிரேக் பந்துவீச்சாளர் துஷான் ஹேமன்த ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

ஐ.பி.எல் சம்பியன் கிண்ணத்தை வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய நிலையிலேயே பதிரன இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் இலங்கை அணிக்காக ஒரே ஒரு டி20 சர்வதேச போட்டியிலேயே ஆடி இருந்தார்.

அதேபோன்று இலங்கை ஏ அணிக்காக சோபித்த ஹேமன்த, உபாதைக்கு உள்ளாகி இருக்கும் வனிந்து ஹசரங்கவுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டார். இது அவரது முதல் சர்வதேச போட்டியாக இருந்தது. அதேபோன்று இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன இரண்டு ஆண்டுகளின் பின்னர் இலங்கை ஒருநாள் அணிக்காக நேற்று விளையாடினார்.

இலங்கை முன்னணி பந்துவீச்சாளர் துஷ்மன்த ஹேமன்த நேற்றைய போட்டியில் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...