லிட்ரோ 12.5kg சிலிண்டர் சுமார் ரூ. 400 இனால் குறைக்கப்படும்!

- 5kg, 2.3kg சிலிண்டர்கள் விலைகளும் குறையும்
- நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும்

லிட்ரோ 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 400 இனால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த விலை குறைப்பு நாளை நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் அறிவிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 5 கி.கி. மற்றும் 2.3 கி.கி. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் உரிய விகிதத்தில் குறைக்கப்படுமென முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை நாளை (04) வெளியிட எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 04ஆம் திகதி முதல் லிட்ரோ 12.5 கி.கி. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 100 இனால் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்


Add new comment

Or log in with...