இராஜகுமாரியின் மரணத்துக்கு நீதி கோரி பெண்கள் போராட்டம்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் மரணமடைந்த பதுளையை சேர்ந்த இளம் தாய் இராஜகுமாரிக்கு நீதி வேண்டுமென்பதுடன், அவரது மரணத்துக்கு காரணமாக இருந்தவர்களுக்கு பக்கச்சார்பின்றி கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா, கந்தப்பளை நகர மத்தியில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் கீழியங்கும் கிராம அபிவிருத்தி மன்றங்களின் ஒன்றியம் இணைந்து திட்ட உத்தியோகஸ்தர்களான பி.அம்பிகை மற்றும் ஜே.கிருஷாந்தி ஆகியோரால் முன்னெடுத்த இந்த போராட்டத்தில் கந்தப்பளை மற்றும் இராகலை பகுதிகளில் உள்ள தோட்டங்களை சேர்ந்த மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குடும்ப பொருளாதார சுமையை சுமந்து கொண்டு பதுளையிலிருந்து கொழும்பில் நடிகை ஒருவரின் வீட்டில் பணியாளராக வேலை செய்து வந்த இந்த இளம் தாய் மீது திருட்டு குற்றம் சுமத்தி பொலிஸ் முறைப்பாடு செய்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அங்கு விசாரணையில் மரணமடைந்துள்ளார். இவரின் மரணம் மர்மமான, நியாயமற்ற மரணத்துக்கு நீதி கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


Add new comment

Or log in with...