சிறுவர்கள் கடத்தப்படுவதாக பொய்யான தகவல்கள்

பொதுமக்களை ஏமாற வேண்டாம் என்கிறது பொலிஸ்

சிறுவர்கள் கடத்தப்படுவதாக அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அது தொடர்பில் மக்கள் ஏமாறக்கூடாது என்றும் பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற போலி தகவல்களை வெளியிடும் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக சிறுவர்கள் கடத்தப்படுவதாக தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் விசாரணைகளின் போது அந்த தகவல்கள் மற்றும் சம்பவங்கள் பொய்யானவை என கண்டறியப்பட்டதாகவும் அந்த தலைமையகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வாறான போலி தகவல்கள், வதந்திகளை மேற்கொள்வோர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வாறான தகவல்களை நம்பி ஏமாறவோ குழப்பமடையவோ தேவையில்லை என்றும் பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...