டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இலோன் மஸ்க் உலகின் பெரும் செல்வந்தர் என்ற அந்தஸ்தை மீண்டும் பெற்றுள்ளார்.
74 வயது பிரான்ஸ் வர்த்தகரான பெர்னாட் ஆர்னோல்டின் எல்.வி.எம்.எச் பங்குகள் 2.6 வீதம் வீழ்ச்சி கண்டதை அடுத்தே மஸ்கினால் முதலிடத்திற்கு முன்னேற முடிந்துள்ளது. இந்நிலையில் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டொலர்களாக உயர்ந்திருக்கும் நிலையில் ஆர்னோல்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆர்னோல்ட் கடந்த டிசம்பரில் மஸ்கை பின்தள்ளி உலகின் பெரும் செல்வந்தராக பதிவானார். இதில் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் எல்.வி.எம்.எச் பங்கு பத்து வீதம் வரை சரிந்ததோடு, ஒரு கட்டத்தில் ஆர்னோல்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டொலர்கள் வரை சரிந்தது.
எனினும் இலோன் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளார். இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment