பெண் ஒருவரை அவரது வீட்டில் வைத்து வேவு பார்த்தது உட்பட வாடிக்கையாளர்களின் தனியுரிமை சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட அமேசன் நிறுவனம் 30.8 மில்லியன் டொலர்களை செலுத்த இணங்கியுள்ளது.
வீட்டின் படுக்கை அறைகள் மற்றும் குளியலறைகளில் பொருத்தப்பட்ட ரிங் பாதுகாப்பு கெமராக்களை பயன்படுத்தி 2017 ஆம் ஆண்டு பல மாதங்கள் பெண் வாடிக்கையாளர் ஒருவரை அமேசன் முன்னாள் ஊழியர் ஒருவர் வேவுபார்த்ததாக அமெரிக்க மத்திய ஆணைக்குழு கூறியதை அடுத்து 5.8 மில்லியன் டொலர்களை செலுத்த அந்த நிறுவனம் இணங்கியுள்ளது.
தீவிர, செயற்கை நுண்ணறிவில் செயல்படும் அலெக்சா எனும் குரலுதவிச் சாதனத்தைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான தனிநபர் உரிமைச் சட்டங்களை மீறிய சந்தேகத்தில் அமேசன் நிறுவனம் அதன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தீர்க்க 25 மில்லியன் டொலர் செலுத்தவுள்ளது.
பெற்றோரின் வேண்டுகோளுக்கு ஏற்ப அலெக்சா பதிவுசெய்த ஒலிப்பதிவுகளை அழிக்கத் தவறியதாக அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும், இழப்பீடு செலுத்திப் பிரச்சினையைச் சமாளிக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் அமேசன் நிறுவனம் கூறியது.
பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களை பாதுகாக்கப் புது அம்சங்களைச் சேர்க்கவுள்ளதாக அது குறிப்பிட்டது.
இதில் பயனீட்டாளர்களின் தனிநபர் தகவல்களைப் பாதுகாக்கத் தவறிய ரிங் நிறுவனம் 5.8 மில்லியன் டொலர்களை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment