கொமர்ஷல் வங்கி அனுசரணையுடன் வவுனியாவில் சதுரங்கப் போட்டி

வவுனியா மாவட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி கொமர்ஷல் வங்கியின் அனுசரணையுடன் இடம்பெற்றது.

இரண்டு தினங்களில் ஏழு சுற்றுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தமது திறமைகளை வெளிக்காட்டினர். வவுனியா வடக்கு மற்றும் தெற்கு வலய கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டிக்கு இலங்கை சதுரங்க சம்மேளனத்தின் இணை அமைப்பான யாழ்ப்பாண மாவட்ட சதுரங்க கழகம் பூரண ஆதரவை வழங்கியது.

10, 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கூடுதலான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவருக்கு தனிநபருக்கான விருது வழங்கப்பட்டது. ஓவ்வொரு போட்டிப் பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு பணப்பரிசும் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.


Add new comment

Or log in with...