- மேன்முறையீடு இருப்பின் அதிபர் ஊடாக பின்னர் கோர முடியும்
2021 டிசம்பர் 31ஆம் திகதி சேவைக் காலத்தை நிறைவு செய்த மற்றும் இடமாற்றம் கடிதம் பெற்றுள்ள தேசிய பாடசாலைகளில் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும், ஜூன் 12 ஆம் திகதிக்குள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஆசிரியர்கள் எவரேனும் தங்களது நியமனங்கள் தொடர்பில் மேன்முறையீடு செய்ய விரும்பினால், உரிய பாடசாலைக்கு கடமைக்கு திரும்பிய பின்னர், அதிபர் ஊடாக ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு மேன்முறையீடு செய்யலாம்.
இவ்விடயம் தொடர்பாக, கல்வி அமைச்சின் ஆசிரியர் இடமாற்றப் பிரிவுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் மேல்முறையீடுகள் தொடர்பான முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Add new comment