தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி!

தங்கத்தின் விலை மீண்டும் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, இன்றையதினம் (02) ஒரு பவுண், 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 147,000 ஆக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை  ஒரு பவுண், 22 கரட் தங்கத்தின் விலை ரூ. 152,600 ஆக  விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (02) அது ரூ. 5,600 இனால் குறைவடைந்து ரூ. 147,000 ஆக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த வாரம் ரூ. 165,000 ஆக விற்பனை செய்யப்பட்டட ஒரு பவுண், 24 கரட் தங்கத்தின் விலை ரூ. 6,000 இனை குறைவடைந்து இன்று ரூ. 159,000 ஆக  விற்க செய்யப்படுவதாக, கொழும்பு செட்டியார் தெரு சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இலங்கை ரூபாவுடன் அமெரிக்க டொலரின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்தமை இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...