விரைவில் பணவீக்கம் தனி இலக்கமாக மாறும்!

வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்

நிதிக் கொள்கையை தளர்த்துவது தொடர்பில், இலங்கை மத்திய வங்கி தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

நிதிச்சபை அமர்வில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிரந்தர வைப்பு வசதிக்கான வீதத்தை நூற்றுக்கு 13 வீதமாகவும், நிரந்தர கடன் வசதிக்கான வீதத்தை நூற்றுக்கு 14 வீதமாகவும் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நிதிச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் வெகுவாக குறைவடையு​மென தெரிவித்துள்ள மத்திய வங்கி, பணவீக்கம் ஒரு இலக்கத்துக்கு வருவதற்கான காலத்துக்கு முன்பதாகவே, தனி இலக்கத்தின் இலக்கை எட்ட முடியுமென்றும் தெரிவித்துள்ளது.

மே மாத இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இதில் சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி பரிமாற்ற கடன் ஒத்துழைப்பும் உள்ளடங்குவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

(லோரன்ஸ் செல்வநாயகம்)


Add new comment

Or log in with...