மதங்களுக்கிடையே ஐக்கியத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை

கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானம் -பிரமித்த பண்டார

மத முரண்பாடுகளை ஏற்படுத்தி, நாட்டில் தற்போதுள்ள அமைதி நிலையை குழப்பும் நோக்கில் செயற்படுவோரு க்கு எதிராக, சட்டத்தை நிலைநாட்ட பின்வாங்கப்போவதில்லை. இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர், மத ஐக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடும் கருத்துக்கள் மற்றும்

செயற்பாடுகள் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு தற்போது இருக்கும் அமைதி நிலையை குழப்பும் நோக்கத்தில் செயற்படுபவர்களுக்கு எதிராக, அரசிலமைப்பின் 09ஆவது அத்தியாயம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் 291 (அ), (ஆ) பிரகாம் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த பின்வாங்கப்போவதில்லை.

மத முரண்பாடுகளை ஏற்படுத்தி, அமைதியைக் குழப்பும் நோக்கில் செயற்படும் பல்வேறு நோக்கங்களையுடைய குழுங்கள் தொடர்பாக நாங்கள் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

கடந்த காலங்களில் அனுபவித்த பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கு முயற்சிக்கும் இச்சந்தர்ப்பத்தில், பல்வேறு தரப்பினர் நாட்டுக்குள் மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.

எனவே, யாராவது தனி நபர் அல்லது திட்டமிடப்பட்ட குழுவொன்று இவ்வாறான குறுகிய நோக்கத்துக்காக செயற்பட முயற்சிக்குமானால், அவர்களுக்கு எதிராக தராதரம் பாரக்காமல் சட்டத்தை நிலைநாட்ட பின்வாங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...