நாட்டில் 111 மருந்து வகைகளுக்கே தட்டுப்பாடு

நிவர்த்திக்க அரசு தீவிர முயற்சியில்

சில மாதங்களுக்கு முன் நாட்டில் சுமார் 200 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. ஆனால் தற்போது 111 மருந்துகளுக்கே தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறு பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை பெற்றுக்

கொள்வது தொடர்பிலும் அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தட்டுப்பாடாகும் மருந்துகளின் எண்ணிக்கையை 70 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திடம் போதிய நிதி உள்ளதா? என அவரிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர், கடந்த ஆண்டை விட, நாட்டின் பொருளாதார நிலைமை பலமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...