இந்தியாவில் முதலீடு செய்ய அவுஸ்திரேலியர்களுக்கு அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அவுஸ்திரேலியாவின் முன்னணி முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களது பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு அழைத்துள்ளார். 

தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்களின் பயனாக உட்கட்டமைப்பு, தொலைத்தொடர்பாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல  துறைகளிலும் வர்த்தக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளவும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்சந்திப்பில் அவுஸ்திரேலியாவின் வங்கித் துறை, எரிசக்தி, சுரங்கத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளையும் பிரதிநிதித்துவப்படும் வகையில் பிரதம நிறைவேற்று அதிகாரிகளும் முன்னணி பல்கலைக்கழகங்களின்  உப வேந்தர்களும் கலந்து கொண்டனர். 

டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், விண்வெளி, புதுப்பிக்கத்தக்க சக்தி, எரிசக்தி, கல்வி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், முக்கிய கனிமங்கள், புடவைக் கைத்தொழில், விவசாயம், சுரங்கம், உணவு பதப்படுத்தல் உள்ளிட்ட பல துறைகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் தமது நாட்டில் காணப்படுவதாகப்  பிரதமர் மோடி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டியுள்ளார். 

இதேவேளை பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை  இந்திய நிறுவனங்களுடன் உருவாக்குவதற்கும் அவுஸ்திரேலிய நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுக்கு பிரதமர்  மோடி ஆலோசனையும் வழங்கியுள்ளார்.


Add new comment

Or log in with...