அணை நீரை இறைத்த அதிகாரிக்கு அபராதம்

செல்பி படம் எடுக்கும்போது விழுந்த கைபேசியை மீட்பதற்கு அணையில் உள்ள நீரை இறைத்த இந்திய அதிகாரி பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட நிலையில் அவருக்கு அரசு அபராதம் விதித்துள்ளது.

நிர்வாகத்தின் அனுமதியை பெறாமல் பல மில்லியன் லீற்றர் நீரை இறைத்ததற்காக 53,092 இந்திய ரூபா அபராதம் செலுத்தும்படி ராஜேஷ் விஷ்வாஸ் என்ற அந்த அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனது 100,000 ரூபா மதிப்புக் கொண்ட கைபேசியில் அரசின் முக்கிய தரவுகள் இருப்பதாகக் கூறியே அதனை மீட்க முயன்றார். ஆரம்பத்தில் சுழியோடிகளைக் கொண்டு தேடியபோதும் கைபேசி கிடைக்காத நிலையிலேயே அணையின் நீரை இறைக்க உத்தரவிட்டார்.

இந்தியாவின் மத்திய மாநிலமான சட்டிகாரில் உள்ள கார்கட்டா அணையில் உள்ள நீரையே அவர் முழுமையாக இறைத்துள்ளார். இந்நிலையில் தனிப்பட்ட நலனுக்காக இறைக்கப்பட்ட நீருக்காகவும் அனுமதியின்றி அதனை இறைத்ததற்காகவும் அபராதம் செலுத்தும்படி நிர்வாகத்தினர் உத்தரவிட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...