உள்ளூர் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள உதவும் IFS மற்றும் Hatch இன் ChallengerX

ChallengerX ஆனது, IFS மற்றும் Hatch ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது AI மற்றும் இயந்திர கற்றலை மையப்படுத்திய அடைகாத்தல் திட்டத்தைக் குறிக்கிறது. இங்கு தெரிவு செய்யப்பட்ட 6 அணிகளில் வெற்றி பெற்ற 2 அணிகளுக்கு ரூ. 2 மில்லியனுக்கும அதிக பணப்பரிசுகளை வழங்கி வைத்ததன் மூலம் இந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இது இலங்கையில் தற்போது காணப்படும் இளம் தொழில்நுட்ப திறமையாளர்களின் உயர்ந்த திறமைக்கு ஒரு சான்றாகும்.

IFS மூலம் உள்ளூர் தொழில்நுட்ப திறமையாளர்களை உலகளாவிய வெளிப்பாட்டுக்கு இணைப்பதன் மூலமான, திறந்த புத்தாக்க தளங்களின் முக்கியத்துவத்தை இந்த திட்டம் எடுத்துரைக்கின்றது. நிறுவனம் தனது உலகளாவிய வாடிக்கையாளர் தளத்திற்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதற்கு வெளிப்புற மூலங்களிலிருந்தான முன்னோக்குகளை மேம்படுத்த இது உதவுகிறது.

இயற்கை பேரழிவுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்கொள்ளும் போது நிறுவனத்தின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு வணிகத்தை தொடர்ச்சியாக மேம்படுத்த ஒரு எதிர்வுகூறப்பட்ட மொடலிங் தொகுதியை வடிவமைத்தலே, IFS முன்வைத்த சவாலாகும். இதற்காக பெறப்பட்ட 40 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த பின்னர், குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட ஆறு குழுக்கள், இத்திட்டத்தில் பங்கேற்க தெரிவு செய்யப்பட்டன.

இதற்கான 6 மாத நிகழ்ச்சியில், இந்த 6 குழுக்களும் Hatch மற்றும் IFS தலைமையிலான பட்டறைகளில், பல்வேறு கல்வி நிபுணத்துவம் மற்றும் பெருநிறுவனங்களின் பின்னணியைக் கொண்ட AI மற்றும் இயந்திர கற்றல் தொடர்பான உலகளாவிய பிரபல வல்லுனர்களில் வழிகாட்டல்களைப் அவர்கள் பெற்றனர். தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி Oliver Pilgerstorfer மற்றும் தள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவின் சிரேஷ்ட பிரதித் தலைவர் Chris Ditchburn, உள்ளிட்ட IFS இன் பங்குதாரர்களுக்கு, தங்களது குறைந்தபட்ச சாத்தியமான தயாரிப்புகளை (MVPs) காண்பிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் குழுவான Data Dreamers எனும் வெற்றி பெற்ற அணிக்கு உச்சபட்ச பரிசாக ரூ. 1.5 மில்லியன் பணப்பரிசு வழங்கப்பட்டது. Data Dreamers அணியானது கணிசமான அளவில் பெண் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தனர். அவர்களின் பணியின் ஒப்பற்ற தரமானது இலங்கை முழுவதிலும் ஆர்வமுள்ள பெண் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு ஒரு உத்வேகமாக விளங்குகிறது. இரண்டாமிடத்தை பெற்ற Team Model.Fit அணிக்கு ரூ. 500,000 பரிசும், Hatch இன் 6 மாத இலவச அங்கத்துவமும் வழங்கப்பட்டது. இதன் மூலம், Hatch இலுள்ள வணிக தொடக்க சமூகத்துடன் இணைந்து மேலும் கற்றுக்கொள்ள பெறுமதியான முன்னோக்குகளையும் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளையும் அணிக்கு இந்த வாய்ப்பு உதவும்.

இலங்கையின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலான நோக்கத்தை மையப்படுத்தி இயங்கும் திறந்த புத்தாக்க கண்டுபிடிப்புகள் முக்கியமாகும் என, Hatch மற்றும் IFS ஆகியன உறுதியாக கூறுகின்றன. இதன் மூலம் வெற்றிகரமான உலகளாவிய தீர்வுகளை நாட்டிற்குள் இருந்தே நேரடியாக உருவாக்க வாய்ப்பு ஏற்படும்.

Hatch பற்றி
Hatch ஆனது விருது வென்ற இலங்கையின் இணைந்த பணியிடமாகும் என்பதோடு, இது  வணிக தொடக்கங்களுக்கான அடைகாத்தல் மற்றும் துரிதப்படுத்தியாக செயற்படுகின்றது. ஜீவன் ஞானம், பிரிந்தா செல்வதுரை, நாதன் சிவகணாநாதன் ஆகியோரினால் இது 2018 இல் ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள Hatch ஆனது, பல்வேறு சமூகங்களைக் கொண்ட 800 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட துடிப்பான ஒரு மையமாக செயற்படுகிறது. அதன் வேலைத்திட்டங்கள் மூலம், வெற்றிகரமாக 130 வணிக தொடக்கங்களை அடைகாத்து, அவர்களது வணிகங்களை துரிதப்படுத்த Hatch உதவியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் குறைந்தபட்சம் 500 வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு அது பங்களித்துள்ளது. குறித்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் புத்தாக்க கண்டுபிடிப்பாளர்களால் செயற்படும் பொருளாதாரத்தை உருவாக்கும் தூர நோக்குடன், ஒரு சிறந்த தொடக்க சூழலை வளர்ப்பதற்கும் இலங்கையை ஒரு முக்கிய வணிக தொடக்க நாடாக நிலைநிறுத்தவும் Hatch உறுதிபூண்டுள்ளது.

IFS பற்றி
இலண்டனைத் தலைமைகமாகக் கொண்ட பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான IFS, இலங்கையில் தனது செயற்பாடுகளை நிறுவி 25 வருடங்கள் எனும் மைல்கல்லை அண்மையில் அடைந்தது. இலங்கையின் தொழில்நுட்ப துறையில் முதலீடு செய்வது தொடர்பான IFS இன் நீடித்த அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாக விளங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று எனும் வகையில், உள்ளூர் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு IFS தொடர்ச்சியாக குறிப்பிடும்படியான பங்களிப்புகளைச் செய்து வருகின்றது.


Add new comment

Or log in with...