தமிழக காவல் துறையினர் அதிரடி
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கம் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
நள்ளிரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு படையினர் இதைக் கைப்பற்றினர்.
இலங்கையிலிருந்து பயணித்த நாட்டுப் படகில் இந்தத் தங்கங்கள் கடத்தி வரப்பட்டன.இதைச் சுற்றிவளைத்த படையிர் தங்கத்துடன்,படகிலிருந்த இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில்,14 கோடி ரூபா மதிப்பிலான 08 கிலோ தங்கத்தை கடத்திச் சென்றமை கண்டறியப்பட் டதாக, தமிழக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கைப்பற்றப்பட்ட தங்கத்தையும், படகையும் பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Add new comment