நாட்டில் திடீர் விபத்துக்கள் அதிகரித்துள்ளதகாவும் ஒரே நாளில் மட்டும் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர், பலியானதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (30) திகதி நிலவரப்படி இவ்வாறு இத்தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா - நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறியொன்று மோதியதில் இருவரும் பலியாகினர்.
மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். கண்டி - கம்பளையில் பஸ்சொன்று மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். பஸ்சை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்டவேளையில், இவர் விபத்துக்குள்ளானார்.
குருநாகல் - குளியாப்பிட்டியில் காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில், ஓட்டோ சாரதி மரணமடைந்தார். 42 வயதான குடும்பஸ்தரே இதில் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில், பாதசாரி ஒருவர் மரணமடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே இதில்,உயிரிழந்தார்.
கொழும்பு - வெள்ளவத்தையில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். இந்த விபத்தில் பெண்ணொருவரும், ஆணும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர். களுத்துறை - பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
33 வயதான முசக்கர வண்டிசாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந் தனர். மொனராகலை - வெல்லவாயவில் வான் மோதியதில், பாதசாரி ஒருவர் மரணமடைந்தார். 72 வயதான வயோதிபரே உயிரிழந்தவராவார்.
Add new comment