ஹிக்கடுவையில் சுமார் 40 மாணவர்கள் ஆஸ்பத்திரியில்

ஹோட்டல் உணவால் ஏற்பட்ட விபரீதம்

ஹோட்டல் உணவு உட்கொண்ட நாற்பது மாணவர்கள் உணவு நஞ்சாகி ஹிக்கடுவை வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டனர்.

ஹிக்கடுவை பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றின் வளாகத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் , பங்குபற்றிய 40 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, ஹோட்டலை ஹிக்கடுவைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சோதனையிட்டனர். இதன்போது ஹோட்டலின் தண்ணீர்த் தொட்டி மாசுபட்டு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் களுத்துறை  சுகாதார பரிசோதகர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இதேவேளை, விடுதிக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்குப்பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஹிக்கடுவை நகரிலுள்ள பல முக்கிய ஹோட்டல்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் பரிசோதிக்கப்பட்டன. இதன்போது, உணவு மற்றும் குளிர்பானங்களை முறைகேடாக சேமித்து வைத்திருந்த 04 ஹோட்டல்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Add new comment

Or log in with...