நிலவுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

நிலவில் ஆய்வுகள் மேற்கொள்வது மட்டுமன்றி, வேற்று கிரத்துக்கு மனிதர்களை அழைத்துச் செல்வதற்கான தொழில்நுட்ப சோதனைகளையும் மேற்கொள்வது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என்று சீன விண்வெளிய ஆய்வு மையப் பிரிவான சி.எம்.எஸ்.ஏவின் இணை பணிப்பாளர் லின் ஷிகியாங் கூறினார்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் தொழில்நுட்பம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே, நிலவுக்கு ஆளில்லாத விண்கலங்களை சீனா வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. நிலவில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஓர் ஆய்வுக் கலத்தையும் சீனா வெற்றிகரமாக தரையிறக்கியது.

முன்னதாக, நிலவில் சர்வதேச ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த 2021ஆம் ஆண்டில் ரஷியாவும், சீனாவும் கூட்டாக அறிவித்தன.


Add new comment

Or log in with...