வெனிஸ் கால்வாய் பச்சை நிறமாக மாறியுள்ள மர்மம்

இத்தாலியின் புகழ்பெற்ற ரியால்டோ பாலத்துக்கு அருகில் வெனிஸின் பிரதான கால்வாயில் உள்ள நீர் ஒளிரும் பச்சை நிறமாக மாறியிருப்பதன் காரணத்தை தேடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்தினர் அந்த நீரின் மாதிரியை பெற்று சோதனையை ஆரம்பித்துள்ளனர்.

இத்தாலியின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நினைவுச் சின்னங்களுக்கு வர்ணம் பூசி வரும் நிலையிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் வெனிஸின் இந்த மர்மம் தொடர்பில் எந்தத் தரப்பும் பதிலளிக்கவில்லை.

சந்தேகத்திற்கு இடமாக செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் அருகில் உள்ள சி.சி.டி.வி கெமராக்களை சோதித்துள்ளனர்.

எனினும் 1968 ஆம் ஆண்டிலும் வெனிஸ் நீர் நிலை பச்சையாக மாறியது. அப்போது ஆர்ஜன்டீன கலைஞர் கார்சியா உரிபுரு விசமற்ற பிரகாசமான பச்சை நிறத்தை நீரில் கசியவிட்டிருந்தார்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே அந்தக் கலைஞர் கால்வாயை பச்சை நிறமாக மாற்றி இருந்தார்.


Add new comment

Or log in with...