BIMSTEC புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2023-24 கல்வியாண்டில் இந்தியாவிலுள்ள நாலந்தா பல்கலைக் கழகத்தில் கீழ்வரும் கற்கைநெறிகளைத் தொடர்வதற்காக இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
- வரலாற்று கற்கைகளில் MA மற்றும் PhD
- பௌத்த கற்கைகள், தத்துவம் மற்றும் மத ஒப்பீட்டு கற்கைகளில் MA மற்றும் PhD
- இந்து கற்கைகளில் (சனாதன தர்மம்) MA மற்றும் PhD
- சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் கற்கைகளில் MSc மற்றும் PhD
- நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவத்தில் MBA
- உலக இலக்கியம் (ஆங்கிலம்) MA மற்றும் PhD
இப்புலமைப்பரிசில் திட்டமானது அனுமதிக் கட்டணம், இக்கற்கை நெறிக்கான கல்விக்கட்டணம், வதிவிட செலவுகள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு ஆகியவற்றுடன் ஒரு தடவைக்கான இருவழி பயணக் கொடுப்பனவையும் உள்ளடக்கியுள்ளது.
இத்திட்டம் குறித்த மேலதிக தகவல்களை https://nalandauniv.edu.in/admissions/ என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பெற முடியும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 2023 ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னதாக (https://nalandauniv.edu.in/admissions/) எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்கவும்.
Add new comment