முஸ்லிம் மீடியா போரம் வருடாந்த மாநாடு ஜூன் 25 தபால் திணைக்கள தலைமையகத்தில்

- புதிய உத்தியோகத்தர் தெரிவுக்கு வேட்புமனு சமர்ப்பிக்க  ஜூன் 10 வரை அவகாசம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26 ஆவது வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு 10 இல் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

வழமைபோன்று இரு அமர்வுகளாக மாநாடு நடைபெற இருப்பதோடு இரண்டாவது அமர்வில் யாப்பு திருத்தம், புதிய உத்தியோகத்தர் தெரிவு என்பன இடம்பெறும் என போரத்தின் செயலாளர் சிஹார் அனீஸ் தெரிவித்துள்ளார்.

புதிய உத்தியோகத்தர் தெரிவுக்கு வேட்பு மனு கோரப்பட்டுள்ளதோடு தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கும் 11 செயற்குழு அங்கத்தவர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஜூன் 10 ஆம் திகதிக்கு முன்னர் தமது விண்ணப்பங்களை பதிவுத் தபாலிலோ நேரிலோ செயலாளருக்கு வழங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை தலைவர் அல்லது செயலாளரிடமிருந்து வட்ஸ்அப் ஊடாகப் பெறமுடியும் எனவும் மாநாடு தொடர்பான விபரங்களோ வேட்புமனுவோ தபாலில் அனுப்பப்படாது எனவும் செயலாளர் தெரிவித்தார்.

யாப்புத் திருத்தம் தொடர்பில் அங்கத்தவர்களின் கருத்துக்கள் மற்றும் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அவற்றை  ஜூன் 18 ஆம் திகதிக்கு முன்னர் பொதுச் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இதேவேளை தங்களது வருகையை பொதுச்செயலாளர் சிஹார் அனீஸ் அல்லது பொருளாளர் ஜெம்ஸித் அஸீமிற்கு  வட்ஸ் அப் ஊடாக உறுதிப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வருடாந்தக் கட்டணம் செலுத்தாதவர்கள் (இரு ஆண்டுகளுக்கான கட்டணம் ரூ. 400) அதனை மீடியா போரத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை 0777874983 எனும் இலக்கத்திற்கு அனுப்புமாறும் கோரப்படுகிறது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இம்மாநாடு நடைபெறுவதால் அங்கத்தவர்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கும் செயற்குழு எதிர்பார்க்கிறது.

முன்னதாக ஜூன் 24 ஆம் திகதி மாநாட்டை நடத்த தீர்மானிக்கப்பட்டதோடு தவிர்க்க முடியாத காரணத்தால் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கணக்கு விபரம்
Sri Lanka Muslim Media Forum
BOC
A/C No: 3268511
Lake House Branch


Add new comment

Or log in with...